இருண்டு, மீண்டும் ஒளிர்ந்த இந்தியா.! பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு கிடைத்த பதில்!



indian-people-light-off-for-modi-request

பிரதமர் மோடி ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு ஒரு விளக்கேற்றி ஒளிரவிடுங்கள் என சொன்னதையடுத்து நாட்டின் மக்கள் அனைவரும் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க கடைபிடித்துள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

modi

கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு மின்சார விளக்குகளை அனைத்து, இல்லங்களுக்கு முன்னால் தீபம் ஏற்ற வேண்டும். தீபங்கள் இல்லையென்றால் மெழுகுவர்த்திகள் ஏற்றலாம். அதுவுமில்லை என்றால் டார்ச் லைட்டுகளை ஒளிர விடலாம். அதுவுமில்லை என்றால் நம் செல்போன் ஒளிகளை ஒளிரவிடலாம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று இரவு 9 மணி முதல் 7 நிமிடம் வரை நாடு முழுவதும் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அனைத்து, இல்லங்களுக்கு முன்னால் தீபம், மெழுகுவர்த்திகள், டார்ச்லைட்டுகள் மற்றும் செல்போன் ஒளிகளை ஒளிரவிட்டு நன்றி கூறியுள்ளனர். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதனை கடைபிடித்துள்ளனர்.