மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வருமானத்தை விட 191% கூடுதலாக சொத்துக்கள் சேர்த்த துணை ஆட்சியர் பரபரப்பு கைது.. அதிரவைக்கும் தகவல்.!
ஒடிஷா மாநிலத்தில் உள்ள ஜெகத்சிங்பூரில் துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் சிட்டா ரஞ்சன் பில்லா. இவரின் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குற்றசாட்டு உறுதியாகி, அவர் தனது வருமானத்தை விட 191% அதிகமான சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பது அம்பலமானது.
இதனையடுத்து, ஒடிசா மாநில வருமானவரித்துறை அதிகாரிகள் துணை ஆட்சியர் சிட்டா ரஞ்சனை அதிகாரிகள் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.