சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
பக்கா ஸ்கெட்ச்.. வீட்டிற்கே வந்து தங்கநகை கடன் கொடுக்கும் ஊழியர், பணத்திற்காக கொலை.. உடல் ஏரியில் மீட்பு.!

வீட்டிற்கே வந்து தங்க நகைகளை வாங்கி கடன் கொடுக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விற்பனை பிரதிநிதி, 2 பேர் கும்பலால் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ரூ.5 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பனசங்கரி - சரபண்டே பாலையா பகுதியை சேர்ந்தவர் திவாகர். இவரின் மனைவி சிவகாமி. திவாகர் தனியார் தங்க நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம் மக்களிடம் தங்கத்தை பெற்றுக்கொண்டு, அவர்களின் வீட்டிற்கே சென்று பணம், நகைக்கடன் கொடுக்கும் பணிகளை செய்து வருகிறது.
கடந்த 19 ஆம் தேதி சுங்கதகட்டே பகுதியை சேர்ந்தவர் தன்னிடம் நகை உள்ளது என்றும், அதனை வாங்கி பணம் கொடுக்குமாறும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இதனையடுத்து, 20 ஆம் தேதி குறித்த நபரை சந்தித்து நகையை வாங்கி பணம் கொடுத்து வர நிறுவன அதிகாரிகள் திவாகரை சென்று வர சொல்லியுள்ளனர்.
அதிகாரிகளின் உத்தரவுப்படி, கடந்த 20 ஆம் தேதி சுங்கதகட்டேவுக்கு திவாகர் சென்றுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கும் வரவில்லை, பணியிடத்திற்கு செல்லவில்லை. மேலும், அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கடந்த 21 ஆம் தேதி காவல் நிலையத்தில் திவாகர் மாயமானது தொடர்பாக புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அப்போது, திவாகரன் அலைபேசி சுங்கதகட்டே அருகேயுள்ள ஒய்சாளநகரில் ஸ்விச் ஆப் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இறுதியாக திவாகரை மஞ்சுநாத் என்பவர் தொடர்பு கொண்டு பேசியதும் உறுதியான நிலையில், துமகூரு மாவட்டத்தில் உள்ள குனிகளை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 28), உத்திரி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (வயது 24) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திவாகரை கொலை செய்து உடலை ஏரிக்குள் வீசிவிட்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், "மஞ்சுநாத் இளநீர் வியாபாரியாக இருந்து வந்த நிலையில், அவரின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சுநாத் மற்றும் முனிராஜ் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்து, தனியார் தங்க நிறுவனம் நகைகளை வீட்டில் வைத்து பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பதை அறிந்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், ரூ.5 இலட்சம் பணத்துடன் நம்பிக்கைக்குரிய விற்பனை பிரதிநிதியான திவாகர் வந்துள்ளார். கொலை திட்டத்துடன் காத்திருந்த 2 கொடூரர்களும் திவாகரை கொலை செய்து, ரூ.5 இலட்சம் பணத்தை கொள்ளையடித்து இருக்கின்றனர். பின்னர், திவாகரன் உடலை சாக்கில் மூட்டையாக கட்டி, கென்னாப்புரா கிராமத்தில் உள்ள ஏரியில் வீசி சென்றுள்ளனர். திவாகரன் வாகனம் மற்றும் செல்போன் போன்றவையும் ஏரியில் வீசப்பட்டுள்ளது" என்பது தெரியவந்தது.
ஏரியில் வீசப்பட்ட திவாகரன் உடல், இருசக்கர வாகனம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் மீட்கப்பட்டது. கைதாகிய 2 இளைஞர்கள் மீது புடனேஹள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.