திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண், தோழிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர்.. அதிரவைக்கும் சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், அப்பகுதியை சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரியவளர்கிறது.
பெண்ணிடம் தனது காதலை தெரியப்படுத்திய நிலையில், அதில் விருப்பம் இல்லாத பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். பலமுறை காதலை வெளிபடுத்தியும் பலனில்லை.
இந்நிலையில், சம்பவத்தன்று பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தியும் பலனில்லாமல் போக, ஆத்திரமடைந்த இளைஞர் பெண் மற்றும் அவரின் தோழிகளின் புகைப்படத்தை தொழில்நுட்ப உதவியுடன் ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி மற்றும் அவரின் தோழிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞனை கைது செய்தனர்.
விசாரணையில், சமீபத்தில் நடிகை ராஷ்மிகாவின் முகம் ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட விடியோவை கையாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்தது அம்பலமானது.