மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வன்முறை, கல்வீசி தாக்குதல்., வெறியாட்டம்..! கர்நாடகாவில் கன்னடர் - மராட்டியர்கள் மோதல்..!
கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லைப்பகுதியில் உள்ள கர்நாடகா மாவட்டத்தில் முக்கிய மாவட்டமாக பெலகாவி உள்ளது. மாவட்டத்தில் மராத்தியர்கள் அதிகளவில் வசித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலமும் பெலகாவியை தன்னுடன் இணைக்க பல நடவடிக்கை மேற்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், பெலகாவி எங்களது சொத்துக்களில் ஒன்று, அதனை விட்டுத்தரமாட்டோம் என கர்நாடகா கூறி வருகிறது.
இதனால் பெலகாவி மாவட்ட விவகாரத்தில் கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே பிரச்சனை, மோதல் மற்றும் வன்முறை சம்பவமும் நடந்து வருகிறது. பெலகாவியில் கன்னட ராஜ்யோத்சவா மற்றும் சுவர்ண சவுதா குளிர்கால கூட்டத்தொடர் மராட்டியர்கள் எதிர்ப்பை மீறி நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் பெலகாவி சுவர்ண சவுதாவில், கர்நாடகா சட்டபசையின் குளிர்கால கூட்டத்தொடர் 13 ஆம் தேதி தொடங்கியது.
இந்தவிஷயத்திற்கு மராட்டிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், கன்னட அமைப்பினர் எஸ்.இ.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மீது கருப்பு மை பூசினர். இதனால் பரபரப்பு சூழல் ஏற்பட்ட நிலையில், கோலாப்பூரில் மராட்டியர்கள் கன்னட கொடியை தீயிட்டு எரித்தனர். இதனால் கர்நாடகத்தில் கன்னடர் - மராட்டியர் பிரச்சனை உருவெடுத்துள்ளது.
பெங்களூரில் இருக்கும் சிவாஜி சிலை மீது கன்னட அமைப்பினர் கருப்பு மைப்பூசி அவமதிக்கவே, பெலகாவில் போராட்டம் நடந்தது. காவல் துறையினர் கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கேட்காத நிலையில், எஸ்.இ.எஸ் அமைப்பினர் - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது.
பதிலுக்கு பதில் என தாக்குதல் சம்பவம் நடந்து 6 கார்கள், 6 ஜீப்கள் உட்பட 26 வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள மாதவ ரோடு பகுதியில் காவல்துறை வாகனத்திற்கு தீவைத்து வன்முறை தொடங்கப்பட்டது. சி.சி.டி.வி கேமரா உதவியுடன் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 27 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் காரணத்தால் பெலகாவி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, மஹாராஷ்டிராவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர் கர்நாடகா மாநிலத்திற்குள் அனுமதி செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. தலைவர்கள் சிலைக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.