மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கடிக்க பணம் கேட்ட மருமகனை, அரிவாளால் சல்லிசல்லியாக வெட்டியெறிந்த மாமனார்..! பரபரப்பு சம்பவம்.!!
மதுபோதையில் தினமும் மாமனாரிடம் தகராறு செய்து வந்த மருமகன், சம்பவத்தன்று செய்த ரகளையால் மாமனாரால் படுகொலை செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், சவதத்தி பூதக்கோப்பா கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 35). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தார்வார் மாவட்டத்தில் உள்ள நாவலகுந்து கிராமத்தை சேர்ந்தவர் நிம்பண்ணா (வயது 60). இவர் ரமேஷின் மனைவியுடைய தந்தை ஆவார். ரமேஷ் தனது மாமனாரின் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
ரமேஷுக்கு எப்போதும் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறும் செய்து வந்துள்ளார். மேலும், சரிவர வேலைக்கு செல்லாமலும், மாமனாரிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் மாமனார் - மருமகன் இடையேயும் தகராறு நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த ரமேஷ், மாமனார் நிம்பண்ணாவிடம் மேலும் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். நிம்பண்ணா பணம் கொடுக்க மறுக்கவே, வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.
இதில், உச்சக்கட்ட ஆத்திரத்திற்கு சென்ற நிம்பண்ணா அரிவாளை எடுத்து குடிகார மருமகனை சரமாரியாக வெட்டி சரித்துள்ளார். இந்த சம்பவத்தில் ரமேஷ் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த நவலகுந்து காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து நிம்பண்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.