மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதல் உல்லாசத்திற்கு தடங்கலாக இருந்த நண்பனை எரித்துக்கொன்ற பயங்கரம்.! பரபரப்பு சம்பவம்.!
தனது நண்பனின் மனைவியை கள்ளக்காதலில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து வந்த நண்பன், கள்ளக்காதல் வாழ்க்கைக்கு நண்பன் இடையூறாக இருந்ததால் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி, கனகரகி கிராமத்தில் இருக்கும் விவசாய நிலம், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், தீயில் சிக்கி வாலிபர் இறந்தது தெரியவந்தது.
அவரின் உடலை மீட்ட மாலமாருதி காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வாலிபர் யார்? எனவும் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையில், நிலத்தின் உரிமையாளர் மர்ம நபர்கள் தனது விவசாய நிலத்தில் தீ வைத்து கொளுத்தியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், விவசாய நிலத்திற்கு வந்து செல்லும் சி.சி.டி.வி கேமிராக்கள் கண்காணிக்கப்பட்டது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் விவசாய நிலத்திற்கு செல்லும் நிலையில், திரும்பி வருகையில் ஒருவர் மட்டுமே வந்தது உறுதியானது.
இந்த காட்சிப்பதிவின் அடிப்படையில் கனகரகி கிராமத்தில் வசித்து வரும் பரசுராம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தனது நண்பனை எரித்து கொலை செய்தததாக காவலர்களிடம் ஒப்புக்கொண்டார். இதுகுறித்த பரபரப்பு வாக்குமூலத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டம் சிந்தகடா பகுதியை சேர்ந்த சந்தோஷும், பரசுராமும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நட்பின் அடிப்படையில் பரசுராம் சந்தோஷின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது, பரசுராம் - சந்தோஷின் மனைவி சந்தியா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் சந்தோஷுக்கு தெரியவரவே, அவர் தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்து இருக்கிறார். இதனால் கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ள சந்தோசை கொலை செய்ய சந்தியா - பரசுராம் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி சந்தோசை கனகரகி கிராமத்திற்கு வரவழைத்த பரசுராம், சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி 2 பேரும் மதுபானம் அருந்தியுள்ளனர். சந்தோஷுக்கு போதை ஏறி தடுமாறிய நிலையில், அவரை விவசாய நிலத்திற்கு அழைத்து சென்ற பரசுராம், நண்பனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, அவரின் உடல் கிடைக்க கூடாது என உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றுள்ளார். சந்தோஷின் உடலோடு பயிர்களும் எரிந்து சேதமாக தொடங்கவே, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்து தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து, பரசுராமை கொலை செய்த காவல் துறையினர், சந்தியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.