மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலி மீது மோகம்; விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்த மனைவியின் அந்தரங்க போட்டோ வெளியிடுவதாக மிரட்டிய கணவன்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி பகுதியை சார்ந்தவர் கிரண் பாட்டில். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இந்த நிலையில், இவருக்கு சமீபத்தில் அறிமுகமான பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கள்ளக்காதலியை கரம் பிடிக்க முயற்சித்துள்ளார். இதற்காக மனைவியிடம் வரதட்சணை கொடுமை சித்திரவதை உட்பட பல்வேறு சர்ச்சை செயல்களை செய்திருக்கிறார். மனைவி அனைத்தையும் பொறுத்துக் கொண்ட நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தை அம்பலப்படுத்தி விவாகரத்து கேட்டுள்ளார்.
விவகாரத்தில் விருப்பம் இல்லாத மனைவி மறுப்பு தெரிவிக்கவே, கள்ளக்காதல் மீது மோகம் கொண்ட கணவர், நாம் இருவரும் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன் என்றும், அதனை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
இதனால் பதறிப்போன மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கிரண் பாட்டிலின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.