சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
47 வயது பெண்மணிக்கு மர்ம கும்பலால் நேர்ந்த சோகம்.. வீடெல்லாம் இரத்த வெள்ளம்.. துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

அங்கன்வாடி மைய பெண் ஊழியர் மர்ம கும்பலால் அடித்தே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டம், நாயனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் வேங்கட லட்சுமம்மா (வயது 50). இவரின் கணவர் ஆஞ்சனேப்பா. தம்பதிகளுக்கு வீணா என்ற மகள் இருக்கிறார்.
வேங்கட லட்சுமம்மா அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மனைவி வேங்கட லட்சுமம்மாவை பிரிந்த ஆஞ்சனேப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
வீணா தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், வேங்கட லட்சுமம்மா தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலையில் வேங்கட லட்சுமம்மாவின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை கொலை செய்து தப்பி சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிகாமணி காவல் துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.