மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலியை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு, உடல் அருகே போதையில் உறங்கிய பயங்கரம்.!
போதையில் கள்ளக்காதலியை அடித்துகொலை செய்த கட்டிட மேஸ்திரி, பெண்ணின் உடல் அருகே படுத்து உறங்கிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாபூர் மாவட்டம், நக்கலக்குண்டே கிராமத்தை சார்ந்தவர் ஆஞ்சநம்மா. கவுரிப்பித்தனூர் சாந்தி நகர் பகுதியை சார்ந்த கட்டிட மேஸ்திரி வேணுகோபால். இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஆஞ்சநம்மாவை வீட்டிற்கு அழைத்து சென்ற வேணுகோபால், அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் மதுபானம் குடித்துள்ளார்.
இதன்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், போதை தலைக்கேறிய சூழல் சண்டை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் கள்ளக்காதலியை அடித்து கொலை செய்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த ஆஞ்சநம்மா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலையை அரங்கேற்றிய வேணுகோபால், போதையில் கள்ளகாதலியின் இரத்த வெள்ள சடலத்திற்கு அருகே உறங்கியுள்ளார். காலை நேரத்தில் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத காரணத்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வேணுகோபாலின் வீட்டிற்கு உள்ளே சென்று பார்க்கையில் ஆஞ்சநம்மா பிணமாக இருந்துள்ளார்.
அவரின் உடல் அருகே வேணுகோபால் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வேணுகோபாலை எழுப்பியுள்ளனர். பின்னர், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆஞ்சநம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், வேணுகோபாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.