மசூதியில் மதநல்லிணக்கம்... 50 வருடமாக பேணிப்பாதுகாக்கப்படும் பாரம்பரியம்.. இந்து - முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம்.!



karnataka-chikkaballapura-hindu-muslim-friendship

மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்து - முஸ்லீம் மத கொடிகள் மசூதியின் மீது பறக்கவிடப்பட்டுள்ளது. 50 வருடமாக நீடித்து வரும் கலாச்சாரத்தை உள்ளூர் மக்கள் அனைவரும் பேணிக்காத்து வருகின்றனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டம், முருகுமலை கிராமத்தில் பழமையான மசூதி உள்ளது. மசூதியில் கடந்த 50 வருடத்திற்கு முன்னதாக இந்து - முஸ்லீம்களின் ஒற்றுமையை மேலும் பேணிக்காத்து உறுதிப்படுத்த வேண்டும் என இரு மதத்தின் கொடிகளும் பறக்கவிடப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக கிராம மக்கள் தெரிவிக்கையில், "இந்த கிராமத்தில் இந்து - முஸ்லீம் என அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்கு தற்போது வரை கருத்து வேறுபாடு என்பது இருந்தது கிடையாது. இதனால் ஒற்றுமையை வெளிப்படுத்த மசூதியில் இரு மத கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன.

karnataka

மசூதியில் நடைபெறும் உரூஸ் விழாவில் இந்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும், முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் முஸ்லீம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் எங்களது கிராமத்தின் சிறப்பு" என்று தெரிவித்தார்.