அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
பள்ளிப்பருவ காதலை கண்டித்த பெற்றோர்கள்.. தங்கையுடன் 16 வயது சிறுமி விபரீதம்.. சாவிலும் இணைபிரியா சோகம்.!
16 வயது சிறுமியின் காதலை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த சிறுமி, தனது 14 வயது தங்கையுடன் ஏரியில் குதித்து உயிரை மாய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர், அகலகுர்கி கிராமத்தில் வசித்து வரும் தம்பதியின் மகள்கள் அஸ்வினி (வயது 16), நிஷிதா (வயது 14). இவர்களில் 16 வயதாகும் சிறுமி அஸ்வினி, இதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது.
இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் சிறுமியை கண்டித்து இருக்கின்றனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அஸ்வினி தற்கொலை செய்துகொள்ளலாம் என எண்ணியுள்ளார். அஸ்வினியும் - நிஷிதாவும் இணைபிரியாத அக்கா - தங்கையாக இருந்து வந்துள்ளனர்.
இதனால் தனது பிரிவை தங்கை தாங்கிக்கொள்வாரா? என்று எண்ணிய அஸ்வினி, தனது முடிவை நிஷிதாவிடம் தெரிவித்துள்ளார். அவரும் இருவரும் சேர்ந்து உயிரை மாய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து, நேற்று இரவில் அக்கா - தங்கை இருவரும் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
பதறிப்போன பெற்றோர் மகள்களை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் என எண்ணியிருந்த நிலையில், கிராமத்தில் உள்ள ஏரியில் இருவரும் சடலமாக மிதந்துள்ளனர். இதனைக்கண்ட பொதுமக்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சகோதரிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.