மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூட்டிய வீட்டில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட 5 சடலங்கள்; நடந்தது என்ன?.. அதிரவைக்கும் சம்பவம்.!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், ஆதிசக்தி நகர் பகுதியில், 5 பேரின் சடலங்கள் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தடயங்களை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் 50 வயது முதல் 80 வயதுக்குள் இருக்கும் நபர்கள் என்பதும், இவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனித்தே வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த ஜூன் 2019 க்கு பின்னர் இவர்களின் வீட்டில் எவ்வித நடமாட்டமும் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் எப்போதும் தனித்து, வீட்டினை பூட்டியே வாழுவதால் உள்ளூர் மக்களும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கூட வீட்டின் வாசலில் உள்ள நிலை சரிந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கு பின்னரே உள்ளூர் மக்களுக்கு சந்தேகம் எழுந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டில் நடத்திய சோதனையில், 6 பேரின் சடலம் மீட்கப்பட்டது. உள்ளூர் மக்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணைப்படி, உயிரிழந்தவர்கள் ஜெகன்னாத் ரெட்டி (வயது 85), அவரின் மனைவி பிரேமா (வயது 80), இவர்களின் மகள் திரிவேதி (வயது 62), மகன்கள் கிருஷ்ணா என்ற பாபு ரெட்டி (வயது 60), நரேந்திர ரெட்டி (வயது 57) என்பது தெரியவந்தது.
இவர்களின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய, எலும்புக்கூடு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.