மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்சாரம் தாக்கி உடல்கருகி உயிரிழந்த குட்டியுடன் உலாவும் தாய் குரங்கு.. கண்ணீரை வரவழைக்கும் வீடியோ.!
உடல்கருகி உயிரிழந்த குட்டி குரங்கை கையில் தூக்கி, தட்டி எழுப்பி தாய் குரங்கு நடத்தி வரும் பாசப்போராட்டம் காண்போரை கண்கலங்க வைக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், செல்லக்கெரே நகரில் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குரங்குகள் மக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அப்பகுதியில் வாழ்ந்து வருகிறது.
இந்நிலையில், பிறந்து சில மாதங்கள் ஆகிய குட்டி குரங்கு ஒன்று மின்கம்பியை பிடித்து விளையாடிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட குரங்கு குட்டி உயிரிழந்துள்ளது.
தனது பிள்ளை உயிரிழந்துவிட்டதை அறியாத தாய் குரங்கு, குட்டியை தன்னுடன் தூக்கிக்கொண்டு சுற்றி வருகிறது. மேலும், அதனை பலமுறை தட்டி எழுப்ப முயற்சித்தும் பலனில்லாத நிலையில், குட்டியை தூக்கியவாறு பாசமழையை பொழிந்து வருகிறது.
தாய்க்குரங்கு தாய்ப்பாசத்தில் செய்யும் நிகழ்வை கண்டு மனமுடைந்துபோன பொதுமக்கள், குட்டி குரங்கை அடக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், தாய்க்குரங்கு குட்டிக்கு அருகே யாரையும் நெருங்க விடாமல் பார்த்து வருகிறது. இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.