மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலேஜுக்கு போகும் போதும், வரும்போதும்.. அந்த 4 பேரால் கல்லூரி மாணவி விபரீத முடிவு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், ஒசதுர்கா சீரணகட்டே கிராமத்தை சார்ந்தவர் ராதிகா (வயது 17). இந்த மாணவி சித்ரதுர்கா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ 2 ஆம் வருடம் பயின்று வந்துள்ளார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சிறுமி பேருந்தில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், அதே பகுதியை சார்ந்த மதப்பா, சுதீப், கோட்டி, அபி ஆகிய 4 வாலிபர்கள் மாணவியை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். இவ்வாறான கொடுமை தினமும் அரங்கேறி வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமி பேருந்து நிலையத்தில் நடந்து சென்றுகொண்டு இருக்கையில், 4 வாலிபர்களும் சேர்ந்து சிறுமியை கிண்டல் செய்து, ஜடையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்துபோன சிறுமி ராதிகா பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் 4 வாலிபர்களையும் கண்டித்துள்ளனர். இருந்தபோதிலும், மிகுந்த மன துயரத்துடன் இருந்த ராதிகா, நேற்று முன்தினத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
பின்னர், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் ராதிகாவின் தற்கொலைக்கு காரணமான 4 வாலிபர்களை கைது செய்ய கூறி போராட்டம் நடத்தினர்.