மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க, இடையூறாக கணவன்..! கொன்றுதூக்கிய மனைவி.. அதிர்ச்சி சம்பவம்.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், மொளகால்மூரு மலைப்பகுதியில், கடந்த பிப். 21 ஆம் தேதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராயதுர்கா, பொம்மனஹட்டி கிராமத்தை சேர்ந்த ஆடு வியாபாரி லிங்கப்பா என்பது தெரியவந்தது.
அவரை மர்ம நபர்கள் கொலை செய்து உடலை மொளகால்மூரு மலைப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்த நிலையில், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என ஆந்திர மாநிலத்திற்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், லிங்கப்பாவின் மனைவி பர்வதம்மா (வயது 32) நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரிடம் அதிகாரிகள் கிடுக்குபிடி விசாரணை நடத்தவே, கணவர் லிங்கப்பாவை தனது கள்ளக்காதலன் ஹெனூர் சாமி (வயது 28) என்ற நபருடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பான வாக்குமூலத்தில் கள்ளக்காதல் ஜோடி தெரிவித்த தகவலாவது,
லிங்கப்பாவின் மனைவி பர்வதம்மாவிற்கும் - ஹெனூர் சாமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் லிங்கப்பாவுக்கு தெரியவரவே, அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து இருக்கிறார்.
இதனை கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன் இருப்பதால், அவனை கொலை செய்யலாம் என் பர்வதம்மா முடிவெடுத்து, கள்ளகாதலனிடம் தகவலை தெரிவித்துள்ளார். அவரும் கொலைக்கு ஒப்புக்கொள்ள, ஆடு வாங்கும் வியாபாரம் தொடர்பாக லிங்கப்பா மொளகால்மூருவுக்கு சென்றவரை, ஹெனூர் சாமி பின்தொடர்ந்து சென்று கொலை செய்தது அம்பலமானது. கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.