மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முட்புதரில் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், பேரதிர்ச்சி திருப்பம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் பரபரப்பு சம்பவம்.!
கணவன் கண்டித்தும் மனைவி கள்ளக்காதலை கைவிட மறுப்பு தெரிவித்த காரணத்தால், மனைவியின் கள்ளக்காதலனை கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம், மொளகால்மூரு எம்.என்.எஸ் படாவனே பகுதியில் வசித்து வருபவர் சிவண்ணா (வயது 45). இவர் வியாபாரியாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிவண்ணா மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு முட்புதரில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மொளகால்மூரு காவல் துறையினர், சிவண்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளை கண்டறிய தனிப்படையும் அமைக்கப்பட்டது. விசாரணையில், சிவண்ணாவுக்கும் - பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது உறுதியானது.
இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என அதிகாரிகள் விசாரணையை முஎடுத்த நிலையில், சிவண்ணாவின் கள்ளக்காதலி கணவர் சந்திரண்ணாவை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சந்திரண்ணா சிவண்ணாவை கொலை செய்தது அம்பலமானது.
இந்த கொலை விவகாரத்தில் சந்திரண்ணாவின் அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தீப்புக்கும் தொடர்பு இருப்பது உறுதியாயகவே, சந்திரண்ணா மற்றும் சந்தீப் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவண்ணாவுக்கும் - சந்திரண்ணாவின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இந்த விஷயம் சந்திரண்ணாவுக்கு தெரியவரவே, அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து இருக்கிறார். இதனை கேட்காத கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரண்ணா தனது அண்ணன் மகன் சந்தீப்பிடம் தகவல் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் சிவண்ணாவை கொலை செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று, தனியே வந்த சிவண்ணாவை பயங்கர ஆயுதத்தால் தாக்கி, வெட்டிக்கொலை செய்து உடலை முட்புதரில் வீசி சென்றுள்ளனர். கைதான சந்திரண்ணா மற்றும் சந்தீப் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.