மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு.. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் 144 தடை..!
ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்துள்ள விவகாரத்தில், இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் போராட்டத்தில் களமிறங்கினர். அதனைத்தொடர்ந்து, விஷம எண்ணம் கொண்டவர்கள் எதிர்தரப்பாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு சூழல் உருவாகி, 144 தடையாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான வழக்கும் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வால் வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து, கர்நாடகாவில் உள்ள உடுப்பி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பை பொறுத்து திடீர் போராட்டம் அல்லது கலவரம் உருவாகும் சூழலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.