மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#144Section: இருதரப்பு மோதல்., கலவரம்... 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. அலர்ட் நிலையில் அதிகாரிகள்.!
சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் இருதரப்பு மோதல் ஏற்பட்டு 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹுப்ளி மாவட்டம், பழைய ஹுப்ளி பகுதியை சேர்ந்தவர் நேற்று இரவு சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய விடியோவை பதிவு செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு, இருதரப்பு மோதிக்கொண்டது. மேலும், கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சமூக விரோதிகளின் தாக்குதலில் காவல் ஆய்வாளர் உட்பட 4 காவல் அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பழைய ஹுப்ளி பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவு செய்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த கலவரத்தில் காவல் துறையினரின் வாகனங்கள் கலவரத்தில் சேதப்படுத்தப்பட்டது. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.