மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி - கார் மோதி பயங்கர விபத்து; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி.!
விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம், குஷ்டகி தாலுகா கல்கெரி கிராமத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கார் - லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்தோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விஜயபுரா பகுதியை சேர்ந்தவர்கள், அங்கிருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்த குடும்பத்தினரின் கார், தமிழ்நாட்டில் இருந்து குஜராத் நோக்கி சென்ற லாரி விபத்திற்குள்ளானது தெரியவந்தது.