#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒருதலைக்காதலால் பயங்கரம்; தொல்லை தாங்காமல் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி.. பெற்றோர் கண்ணீர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் வசித்து வருபவர் ஹர்ஷிதா (வயது 21). பட்டம் பயின்றுள்ள அவர், மைசூரில் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்று வந்துள்ளார். அதே கிராமத்தைச் சார்ந்த சிபு என்ற இளைஞர் ஹர்ஷிதாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தினமும் பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும் படியும், திருமணம் செய்யும்படியும் வற்புறுத்தி ஹர்ஷிதாவை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு விருப்பம் இல்லாத ஹர்ஷிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அர்ஷிதாவுக்கு திருமணம் செய்யவும் பெற்றோர் ஏற்பாடு செய்து வந்த நிலையில், சிபுவின் காதல் தொல்லை அதிகரித்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்துபோன ஹர்ஷிதா, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அதிகளவு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், ஹர்ஷிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின், அவரது பெற்றோர் புகாரியின் பேரில் ஷிபுவை தேடி வருகின்றனர்.