#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அக்கடாவென சாலையோரம் நின்ற லாரி.. அதிவேகத்தில் பாய்ந்து, தறிகெட்டு விபத்திற்குள்ளான கார்.. 3 பெண்கள் பரிதாப பலி.!
அதிவேகத்தில் பயணித்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், கோரா கிராமம் இடையே பெங்களூர் - புனே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நேற்று கோரா கிராமம் அருகே லாரி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்றுகொண்டு இருந்தது.
அப்போது, அவ்வழியே வந்த கார், அதிவேகத்துடன் பயணித்து கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரில் இருந்த 3 குழந்தைகள் மற்றும் வாலிபர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்த விசாரணையும் நடைபெற்றது.விசாரணையில், பெங்களூரை சேர்ந்த அன்னபூர்ணா (வயது 55), ஆர்த்தி (வயது 32), அதிதி (வயது 30) உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.