#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அருந்ததீ மறுபிறவி கதையை நம்பி தீக்குளித்து உயிரை மாய்த்த கல்லூரி மாணவர்.. அலறல் சத்தத்தில் அதிர்ந்த மக்கள்.!
22 வயது கல்லூரி மாணவர் அருந்ததீ திரைப்பட பாணியில் அனுஷ்கா போல மறுபிறவி எடுக்க எண்ணி தீக்குளித்து உயிரை மாய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், மதுகிரி கிராமத்தில் வசித்து வருபவர் ரேணுகா பிரசாத் (வயது 22). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.யூ.சி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால், திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமாக தன்னை பாவித்துக்கொள்வார்.
இந்த நிலையில், கடந்த சில மாதமாகவே அனுஷ்காவின் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படத்தையும் பார்த்து வந்த ரேணுகா பிரசாத், அருந்ததீ திரைப்படத்தையும் பார்த்துள்ளார். இப்படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரத்தில் ஜாக்கமகாவாக அவர் வாழும்போது தலையில் தேங்காய் உடைத்து உயிரை மாய்த்துகொள்வார்.
அதனைத்தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து மறுபிறவி எடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றுவார். இந்த கதைகளை உண்மையாக நம்பி தனக்குள் ஏற்றுக்கொண்ட ரேணுகா பிரசாத், தன்னுடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இருக்கிறார்.
உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது.