பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நண்பர்களுக்குள் பணத்தகராறு... தனியாக அழைத்து சென்று முதுகில் குத்திய துரோகம்.!!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம் கொரட்டகெரே, எம். கொல்லஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் லிங்கண்ணா (வயது 48). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். கடந்த 12 ஆம் தேதி வெளியே சென்று வருகிறேன் என்று மனைவி பாக்கியம்மாவிடம் கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீட்டிற்க்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை என்பதால், கோரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், லிங்கண்ணாவுக்கும் - அவரது நண்பர் பசவராஜுக்கும் இடையே பணத்தகராறு இருப்பதை விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் பசவராஜை பிடித்து விசாரணை செய்கையில், லிங்கண்ணாவை கொலை செய்து உடலை குழிதோண்டி புதைத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தில், "லிங்கண்ணாவிடம் நான் ரூ.3 இலட்சம் கடன் வாங்கி இருந்தேன். கடனை என்னால் திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
லிங்கண்ணாவின் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த நான், அவரை கொலை செய்ய முடிவெடுத்து, கடந்த 12 ஆம் தேதி லிங்கண்ணாவை அழைத்து சென்று அடித்து கொலை செய்தேன். உடலையும் புதைத்துவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். பசவராஜின் வாக்குமூலத்தின் பேரில் அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.