பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பணியிட நட்பு துரோகமாக மாறிய பயங்கரம்.. கடனை கேட்ட பெண்மணி கொலை, உடல் கால்வாயில் வீச்சு.!
கொடுத்த கடனை திரும்பி கேட்ட பெண்மணி கொலை செய்யப்பட்டு உடலை கால்வாயில் வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குப்பி வடலூரு கிராமத்தை சார்ந்தவர் கலாவதி (வயது 40). இவர் துமகூருவில் இருக்கும் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இதே தொழிற்சாலையில் கஜேந்திரா என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நட்பாக தொடர்ந்த நிலையில், கலாவதியிடம் கஜேந்திரா கடன் வாங்கி இருக்கிறார்.
இந்த கடனை அவர் மீண்டும் திரும்ப தராத நிலையில், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வேலைக்கு சென்ற கலாவதி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால், கஜேந்திரா மீது சந்தேகம் இருப்பதாக உறவினர் குப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் கஜேந்திராவை கைது செய்து விசாரணை நடத்துகையில், கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது கலாவதியை அடித்து கொலை செய்து, உடலை கால்வாயில் வீசி சென்றது அம்பலமானது. கஜேந்திராவை கைது செய்த காவல் துறையினர், அவரது வாக்குமூலத்தின் பேரில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கலாவதியின் உடலை தேடி வருகின்றனர்.