காலையில் வங்கி உள்ளே வந்த ஊழியர்கள்.. மேனேஜர் அறையை பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய வங்கி மேலாளர்..!
வங்கி அலுவலகத்திலையே வங்கி மேலாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துப்பரம்பாவில் இயங்கி வரும் கனரா வங்கி கிளையில் மேலாளராக திரிசூரைச் சேர்ந்த ஸ்வப்னா(40) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் வங்கி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது மேலாளர் ஸ்வப்னா தனது அறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஸ்வப்னாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வங்கிக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில், காலை 8.10 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த ஸ்வப்னா, காலை 8.17 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் இறப்பதற்கு முன் ஸ்வப்னா தனது டைரியில் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றை அவரது மேசையில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், "பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், தன்னால் பணியில் சிறப்பாக செயல்பட முடியாது" எனவே தற்கொலை செய்துகொள்கிறேன் என ஸ்வப்னா எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட ஸ்வப்னா கடந்த வருடம் செப்டம்பரில் பதவி உயர்வு பெற்று கிளை மேலாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். அதற்குள் இப்படி அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மேலும் சோமான விஷயம் என்வென்றால், ஸ்வப்னாவின் கணவர் சாபு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார்.
நிரஞ்சன் மற்றும் நிவேதிகா ஆகிய தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்த ஸ்வப்னாவும் தற்போது தற்கொலை செய்துகொண்டதால் அம்மா, அப்பா இருவரையும் இழந்து அந்த குழந்தைகள் அனாதையாக நிற்கின்றனர். இதனால் இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.