சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
காதலை ஏற்றுக்கொள்ளாத தோழியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சைக்கோ காதலன்.. அதிரவைக்கும் சம்பவம்.!

தனது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணை ஒருதலைக்காதலன் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர், பானூரை சேர்ந்த இளம்பெண் விஷ்ணு பிரியா. இவரும், அப்பகுதியை சேர்ந்த ஷியாம் ஜித் என்பவரும் நட்பு வட்டாரத்தில் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், விஷ்ணு பிரியாவை காதலியாக பாவித்த ஷியாம் ஜித், அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், தனது காதலையும் தெரிவித்துள்ளார்.
நண்பனை காதலராக பார்க்க விரும்பாத விஷ்ணு பிரியா காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் ஜித், சம்பவத்தன்று விஷ்ணு பிரியாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
மீண்டும் காதல் தொல்லை கொடுக்கவே, அதனை ஏற்றுக்கொள்ளாத விஷ்ணு பிரியாவின் கழுத்து மற்றும் கைகளை அறுத்து கொலை செய்து ஷியாம் தப்பி சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.