மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நட்பென்று நயவஞ்சகம்.. 3 சிறுமிகள் 2 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீட்டிற்கு அழைத்து மயக்கமருந்து கொடுத்து பயங்கரம்.!!
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், மருத்துவக்கல்லூரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விஷ்ணு, ஜிஷ்ணு. இவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 3 பேர் தோழிகள் என கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் அப்பகுதியிலேயே வசித்து வந்ததால் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 சிறுமிகளையும் விஷ்ணு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
விபரீதம் புரியாத தோழிகளும் நம்பி செல்ல, அங்கு இவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மயங்கிய சிறுமிகளை விஷ்ணு மற்றும் அவரின் நண்பர் ஜிஷ்ணு சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து விழித்த சிறுமிகளுக்கு உண்மை தெரிய, அவர்கள் கண்ணீருடன் வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். பின் ஒரு சிறுமி தங்களின் நிலை குறித்து பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவிக்க, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், 3 சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.