#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராஜஸ்தானில் பரபரப்பு.... குல்ஃபி சாப்பிட்ட 65 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.! பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை.!
ராஜஸ்தான் மாநிலத்தில் குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 65 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது . ஒரு விற்பனையாளரிடமிருந்து குல்ஃபி ஐஸ் வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு வயிற்று வலியும் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50 குழந்தைகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் 15 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையை எச்சரித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை தீவிரமான விசாரணையில் இறங்கி உள்ளது. அந்த விற்பனையாளரிடமிருந்த குல்ஃபி ஐஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வாளங்களுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.