மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு.. இமாச்சலப் பிரதேசம் மணாலியில் நிலச்சரிவு... 200க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பு.!
இமாச்சலப் பிரதேசம் மணாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் தவிர்த்துவரும் செய்தி நாட்டையே அதிர்ச்சி கொள்ளாக்கியிருக்கிறது.
இந்தியாவில் இருக்கக்கூடிய கோடை வாசஸ்தலங்களில் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குவது இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் மணாலி. இங்கு நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சண்டிகர் மணாலி தேசிய நெடுஞ்சாலையில் ஏழாவது மைலில் இருக்கும் மண்டி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது . இந்த நிலச்சரிவை தொடர்ந்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 25ஆம் தேதி முதல் 200க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு சிக்கியுள்ளனர். என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து போக்குவரத்தை சீரமைக்க கால அவகாசம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.