சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அசத்தும் புதிய முதலமைச்சர்!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதனால் பல மாநிலங்களில் இருந்து அவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
ஆந்திர மாநில காவல்துறையில் உள்ள காவலர் முதல் ஆய்வாளர் வரை பதவியில் இருப்பவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தார். அதன்படி இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார், வார விடுமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி மொத்தம் 19 விடுமுறை மாடல்களை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார். இதில் அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும், வார விடுமுறை நாட்களில் சிப்ட் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.