மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே தேவையில்லாமல் வெளியே வராதீங்க.! கொரோனா 2வது அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழப்பு.!
இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். முதலாவது கொரோனா பரவலின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், தற்போது வேகமெடுத்துள்ள கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 21 மருத்துவர்கள் உயிரிழந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.