மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான பெண் 4 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்: வயல்வெளிக்கு கடத்திச்சென்று நடந்த பயங்கரம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விவகாரம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 34 வயதான திருமணம் முடிந்த பெண்மணி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள அசோக் நகர் மாவட்டம் சதோத்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 34 வயது பெண்மணி வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 30ம் தேதி மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் தொடர்பான சம்பவம் நடந்துள்ளது.
சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், அசோக் நகர் மாவட்டத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக செப்டம்பர் 30ம் தேதி காலை வந்திருக்கிறார். பின் மாலை 4 மணியளவில் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில், ஜீப்பில் வந்த கும்பல் பெண் தனியாக நிற்பதை கண்டு கடத்தியிருக்கின்றனர்.
எங்கு அழைத்துச் செல்கிறோம் என்பது தெரியாமல் இருக்க, கண்களை கட்டி நிலையில் அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள வயல்வெளிப்பகுதிக்கு பெண்ணை அழைத்து சென்ற 4 பேர் கும்பல், பெண்மணியை பயங்கர ஆயுதங்கள் முன்னிலையில் பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளது.
பின், அவரை வயல் வெளியிலேயே கை-கால்களை கட்டி தப்பி சென்றுள்ளனர். அவ்வழியே தனது விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி ஒருவர் பெண்ணின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.