மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாய் கடித்து மாடு பலி.. ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த மருத்துவமனையில் குவிந்த மக்கள்.!
பண்ணையில் இருந்த மாடு நாய் கடித்து உயிரிழந்த நிலையில், அதன் பாலை குடித்த நபர்கள் தங்களை நாய் கடித்துவிட்டதாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு, அங்குள்ள மாட்டுப்பண்ணை வாயிலாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாட்டுப்பண்ணையில் உள்ள எருமை மாட்டினை நாயொன்று கடித்ததாக தெரியவருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட எருமை மாடு உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துவிடவே, இந்த தகவல் கிராம மக்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, எருமை மாட்டு பால் குடிக்கும் 40 க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக மருத்துவமனைக்கு சென்று நாய் கடித்ததாக கூறி ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஒரு சமயத்திற்கு மேல் அதிகளவு மக்கள் வந்ததை கண்ட மருத்துவர்கள், அவர்களிடம் விசாரித்தபோது ஒருவரையும் நாய் கண்டிக்கவில்லை என்பது உறுதியானது. மேலும், நாய் கடித்து மாடு இருந்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, எருமை மாட்டின் பால் குடித்ததால் ரேபிஸ் நோய் பரவாது என்ற அறிவுரை கூறிய மருத்துவர்கள், மேற்படி தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.