விளைபொருளுக்கு விலையில்லை.. விரக்தியடைந்த விவசாயி செய்த பரபரப்பு காரியம்.!
தான் விளைவித்த பூண்டுக்கு உரிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயி, அதனை தீவைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்ட்ஸ்சுர் க்ரிஷி உபாஜ் மண்டியில், அப்பகுதியை சார்ந்த விவசாயி ஷங்கர் என்பவர், தான் விளைவித்திருந்த பூண்டை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார்.
அவர் எதிர்பார்த்த அளவு பூண்டு விலைபோகாத நிலையில், ஆத்திரமடைந்த விவசாயி சங்கர் தான் கொண்டு வந்த பூண்டிற்கு மண்டியில் வைத்தே தீயிட்டு கொளுத்தினார். மேலும், நான் ரூ.2.5 இலட்சம் விலை செலவழித்து பூண்டை விளைவித்த நிலையில், அதனால் ரூ.1 இலட்சம் மட்டுமே வருமானம் வந்துள்ளது.
இதனால் எனக்கு இழப்பு தான் ஏற்படும். அதற்கான ஆகிய செலவுகளை நான் ஈடு செய்ய இயலாது. அதனால் பூண்டினை விற்பனை செய்ய மனமில்லாமல் தீயிட்டு கொளுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
A farmer was upset for getting less price for his crop in the market; set his one quintal of garlic crop on fire. In the preliminary investigation, no damage has been done to anyone else in the vicinity: Jitendra Pathak, Yashodharman police station in-charge (18.12) pic.twitter.com/YXTBzUk2ff
— ANI (@ANI) December 19, 2021