"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
என்னவொரு மனசு! வெறும் 12 மாம்பழங்களை ரூ.1.20 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்! காரணம் தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க!!

கடந்த ஆண்டு பரவ துவங்கிய கொரனோ வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் இரு ஆண்டுகளாகவே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கும் ஸ்மார்ட் போன்கள் இல்லாத நிலையில் பல ஏழைக்குழந்தைகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் துளசி குமாரி. 8வயது நிறைந்த இவர் சாலையோரத்தில் மாம்பழம் விற்று வந்துள்ளார். இதைக் கண்ட செய்தியாளர் ஒருவர், இவ்வளவு சிறுவயதில் நீங்கள் ஏன் மாம்பழம் விற்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி தனக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது. அதற்கு போன் தேவைப்படுகிறது. செல்போன் வாங்கி தரும் அளவிற்கு என் அப்பாவிடம் வசதி இல்லை. அதனால் நான் மாம்பழம் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் செல்போன் வாங்க முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
இந்த செய்தி வைரலான நிலையில், அதனை கண்ட தொழிலதிபர் நரேந்திர ஹீட் மற்றும் அவரது மகன் அமெயா ஹீட் இருவரும் சிறுமிக்கு உதவ வேண்டுமென எண்ணியுள்ளனர். இந்நிலையில் சிறுமி மாம்பழம் விற்கும் இடத்திற்கு விரைந்த அவர் 12 மாம்பழங்களை 1.20 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு மொபைல் போன் ஒன்றை இலவசமாக கொடுத்ததாகவும், இரு வருடத்திற்கு தேவையான இன்டர்நெட் கட்டணத்தையும் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் வைரலாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.