அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
சிதைந்துபோன குடும்பம்..!! கொரோனாவுக்கு மனைவி உயிர் இழந்ததால் 2 மகள்களுடன் தூக்கில் தொங்கிய தந்தை..
மனைவி கொரோனாவால் உயிரிழந்த சோகத்தில் கணவன் தனது மகள்களுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவிக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மனைவி இறந்த சோகத்தில் நாகராஜிம், தாயை இழந்த சோகத்தில் அவரது மகள்கள் கீர்த்தி (18) மற்றும் மோனிஷா (14) ஆகியோரும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுக்காலை நாகராஜின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாகராஜ் மற்றும் அவரது இரண்டு மகள்களும் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.
பின்னர் மூவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், மனைவி இறந்ததில் இருந்து சோகத்துடன் காணப்பட்ட நாகராஜ், தனது மகள்களின் சம்மதத்துடன் தூக்கில் தொங்கியிருக்கலாம் என கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.