மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. ஒரு மாஸ்க்கின் விலை மட்டும் ஐந்து லட்சமா! அதில் அப்படியென்ன ஸ்பெஷல்னு பார்த்தீர்களா! ஆச்சரியத்தில் மக்கள்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மேலும் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர் இந்த கொடூர நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் துயரமும் நேர்ந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது தவறாமல் மாஸ்க் போட வேண்டுமென்று பலராலும் அறிவுறுத்தப்பட்டனர் . அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்க் அணிவது என்பது அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. பலரும் வித்தியாசமான, டிசைன் டிசைனாக மற்றும் அதிநவீன மாஸ்க்குகளை அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற நபர் முழுவதும் தங்கத்தினால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து வலம் வருகிறார். இதன் மதிப்பு மட்டும் ஐந்து லட்சமாம். இந்த நிலையில் ஊர்க்காரர்கள் அனைவரும் அவரை கோல்டன் பாபா என்று அழைத்து வருகின்றனராம். இந்நிலையில் அவர் தனக்கு தங்கத்தின் மீதிருக்கும் மிகுந்த ஈர்ப்பின் காரணமாகவே இவ்வாறு தங்கத்தில் மாஸ்க் அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.