மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு கொரோனா மாஸ்க்கா..? கலர் கலரா..! பளிச்சென்று..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!
சீனாவில் தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள மக்கள் அனைவரும் சமூக விதிகளை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் விதவிதமான மாஸ்க்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் சமீபத்தில் கூட சங்கர் குராடே என்பவர் தங்கத்தில் மாஸ்க் அணிந்து பெரும் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த கௌர் என்பவர் வித்தியாசமாக எல்.ஈ.டி மாஸ்க்கை வடிவமைத்துள்ளார். சாதாரண துணியில் எல்.ஈ.டி பல்புகள் வைத்து மாஸ்க்கை உருவாக்கியுள்ளார்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மாஸ்க்கை தயாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.