மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக் நியூஸ்.. நடிகரின் கார் ஓட்டுனரை போட்டுத்தள்ளிய மகன்.. வேலைக்கு செல்லுமாறு திட்டியதால் ஆத்திரம்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அந்தேரியின் புறநகர் பகுதியில் வசித்து வரும் 53 வயது நபர் பாலிவுட் நடிகரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 24 வயது மகன் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் கோபமுற்ற தந்தை கடந்த இரண்டு மாதங்களாகவே அவரை திட்டி தீர்த்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஆத்திரமடைந்த தந்தை எப்பொழுது தான் நீ வேலைக்கு செல்வாய்? என்று கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த மகன் வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் வலிதாங்காமல் தந்தை அலறவே, சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அத்துடன் இளைஞரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.