தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இடைக்கால பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணரான முன்னால் பிரதமரின் கருத்து என்ன?
இன்னும் சில மாதங்களில் மத்திய அரசின் பதவிகாலம் முடிவடைந்து, ஏப்ரல் - மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருகின்றது. இந்தநிலையில் நேற்று இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பல்வேறு சலுகைகள் அளித்து, அனைவரின் மனதிலும் பாஜக அரசு இடம்பிடிக்க முயற்சி செய்துள்ளது.
அந்த பட்ஜெட்டில் இடம்பிடித்த முக்கிய அறிவிப்புகள்:
* இந்தியாவில் இனிமேல் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.
* ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.
* ஊரக சுகாதாரம் 98 % உறுதி செய்யப்பட்டு 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக மாற்றப்பட்டுள்ளது.
* 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ரூ.6 ஆயிரம் 3 தவணையாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
*வருமாண வரி உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உற்சாகம்.
*மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும்
*மாதம் ரூ 15000 வரை ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 வழங்கப்படும்
*சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதும்.
*ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு.
*பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 182 நாட்களாக அதிகரிப்பு.
*பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி 6 லட்சமாக உயர்வு.
இந்நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமரும், சிறந்த பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "நடைபெற உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். இது ஒரு தேர்தல் பட்ஜெட். விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அளித்துள்ள சலுகைகள் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது" என்று மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.