திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு அலுவலகத்தில் திடீர் ரெய்டு; ஆவணங்களை திறந்து பார்த்து லூட்டியடித்த குரங்கு..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஹரன்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகத்தில், நேற்று பணியாளர்கள் வழக்கம்போல தங்களின் பணிகளை மும்மரமாக கவனித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த குரங்கு ஒன்று, அதிகாரிகளை போல மேஜையின் மீது அமர்ந்து அங்கிருந்த கோப்புகளை திறந்து பார்த்து ஆய்வு செய்தது.
उत्तर प्रदेश के सहारनपुर में एक बंदर दफ्तर पहुंचकर अधिकारियों की तरह मेज पर रखी फाइलें जांचने लगा। वहीं मौजूद लोगों ने बंदर की हरकत का वीडियो बना लिया#ViralVideo #UttarPradesh #MonkeyVideo #Saharanpur pic.twitter.com/IKSWfkK7aa
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) October 15, 2023
இதனைக்கண்ட பணியாளர்கள் ஒவ்வொரு கோப்புகளாக பாதுகாக்க முயற்சித்தனர். மேலும், குரங்குக்கு வாழைப்பழம் ஒன்றையும் வழங்கினர். அதனை வாங்க மறுத்த குரங்கு, கோப்புகளை சோதனை செய்வதிலேயே ஆர்வமாக இருந்தது.
இந்த வீடியோ அங்கிருந்த அரசு பணியாளர்களால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் வனத்துறையினர் வந்து குரங்கை அப்பகுதியில் இருந்து விரட்டியடித்தனர்.