மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 16 வயது சிறுமி... தந்தை மற்றும் பக்கத்து வீட்டு இளைஞர் போக்சோவில் கைது.!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பாக அவரது தந்தை மற்றும் பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையின் திலக் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாக தாயிடம் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது தாயும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் அந்த பெண்ணிடம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு ஆலோசகர்கள் மூலம் சிறுமியிடம் உரையாடினர்.
பொது சிறுமியின் பக்கத்து வீட்டைச் சார்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டில் இல்லாத போது சிறுமியின் தந்தையும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக சிறுமியின் தந்தை மற்றும் பக்கத்து வீட்டைச் சார்ந்த 32 வயதில் இளைஞர் ஆகியோரின் மீது புகாரளித்தனர். இந்தப் புகாரை தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. மேலும் கர்ப்பம் தொடர்பாக சிறுமிக்கு மருத்துவ உதவிகளும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.