திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரி முதல்வரின் அலட்சியம் ...!! பெற்றோல் ஊற்றி கொளுத்திய மாணவன்... கொடூர சம்பவம்...!!
மத்திய பிரதேசத்தில் கல்லூரி முதல்வரை, மாணவன் ஒருவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்சியை அளிக்கிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பிரபலமான பி.எம். பார்மஸி கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50). இன்று மாலை கல்லூரி நேரம் முடிந்து 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
முதல்வரை வழிமறித்த 24 வயது மாணவன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் கையில் வந்திருந்த பெட்ரோலை, விமுக்தா ஷர்மா மீது ஊாற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினான்.
அங்கிருந்தவர்கள் கல்லூரி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல். காவல்துறையினர், தீ வைத்து கொளுத்திய இளைஞனை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த இளைஞன் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்றும், தனது மதிப்பெண் சான்றிதழை கேட்டு பல முறை முதல்வரை சந்தித்தும், தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.