மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாக்குவாதத்தால் இளைஞர் அடித்தே கொலை.! இருவர் கும்பலால் பகீர் சம்பவம்.!
புதுடெல்லியில் உள்ள ஜானகிபுரி பகுதியைச் சார்ந்தவர் பர்வேஸ் குமார் (வயது 25). இவரின் நண்பர் அமர் கான் (வயது 23). இப்பகுதியை சார்ந்தவர் சவுரவ் உபத்தியாய். சம்பவத்தன்று இவர்கள் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது ஆத்திரமடைந்த பர்வேஷ் குமார் மற்றும் அமர் கான் இருவரும் சேர்ந்து சவுரவை கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். இதனால் மயங்கி விழுந்த சௌரவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சவுரவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், இயல்பாக பேசிக்கொண்டிருந்த போது திடீரென எழுந்த வாக்குவாதத்தால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.