மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்னும் 10 ஆண்டுகளுக்கு வாய்ப்பே இல்லை.! பெட்ரோல், டீசலை அந்த வரம்புக்குள் கொண்டுவர முடியாது.! சுஷில்குமார் மோடி
அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நிதி மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் சுஷில்குமார் மோடி பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பரவலாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவருவதை எந்த மாநிலமும் விரும்பவில்லை என தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மாநிலங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது, பெட்ரோலிய பொருட்கள் மீது 60 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்றால், அதில் மத்திய அரசுக்கு 35 ரூபாயும், அந்தந்த மாநில அரசுக்கு 25 ரூபாயும் கிடைக்கிறது. மேலும், மத்திய அரசுக்கு கிடைக்கும் 35 ரூபாயிலும் மாநில அரசுகளுக்கு 42 சதவீத தொகை அளிக்கப்படுகிறது. ஆனால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரிவிகிதமான 28 சதவீதம்தான் விதிக்க முடியும்.
அதாவது, லிட்டருக்கு 60 ரூபாய்க்கு பதிலாக 14 ரூபாய்தான் வரியாக வசூலிக்க முடியும். இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை எப்படி ஈடு செய்வது? எனவே, இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.