சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அடக்கொடுமையே!! கடனை அடைக்க தன் சிறுநீரகத்தை விற்க முயன்ற நர்சிங் மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை..!

ஹைதராபாத்தில் நர்சிங் கோர்ஸ் படித்தவர் சுனந்தா ராவ். இவரது சொந்த ஊர் குண்டூர். இவர் தான் பெற்ற கடனை அடைப்பதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முடிவு செய்துள்ளார். இதற்காக ஆன்லைனில் அவர் அடிக்கடி தேடுதலில் ஈடுபட்டும் வந்துள்ளார். இதனால் அவருக்கு ஆன்லைனில் பிரவீன்ராஜ் என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது.
இந்நிலையில் பிரவீன் ராஜ் சுனந்தாவின் சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். அத்தோடு ஆப்ரேஷன்க்கு முன்பு பாதி தொகை கொடுத்து விடுவதாகவும், ஆப்ரேஷன் முடிந்த பிறகு பாக்கி தொகையை கொடுத்து விடுவதாகவும் கூறி இருக்கிறார் பிரவீன் ராஜ்.
இதனையடுத்து சென்னையில் உள்ள சிட்டி பேங்கில் ஒரு கணக்கு தொடங்கி அதில் 3 கோடியை ட்ரான்ஸ்பர் செய்தார். இந்த பணத்தை பெற வேண்டுமானால் சரிபார்ப்பு கட்டணமாக 16 லட்சத்தை செலுத்தும்படி சுனந்தாவிடம் கேட்டுக்கொண்டார் பிரவீன் ராஜ். மேலும் இதனை நம்பி அந்தக் வங்கி கணக்கிற்கு 16 லட்சத்தை அனுப்பி உள்ளார் சுனந்தா. ஆனால் பணத்தை அனுப்பியும் 3 கோடி பணம் கிடைக்காததால் அதிர்ந்து போன சுனந்தா தான் கொடுத்த 16 லட்சத்தை திருப்பிக் கொடுக்கும்படி பிரவீன் ராஜிடம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து பிரவீன் ராஜ் சுனந்தாவிடம் பணம் வேண்டும் என்றால் டெல்லியில் வந்து வாங்கிக் கொள்ளும்படி ஒரு முகவரியை கொடுத்துள்ளார். ஆனால் அந்த முகவரிக்கு சென்று சுனந்தா பார்த்தபோது அது போலியான முகவரி என்று தெரியவந்துள்ளது. இதனால் பதறிப்போன சுனந்தா உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் தகவல் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.