மீண்டும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ரிசர்வ் வங்கி; இனி ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் கிடையாது.



oneline money transfer - no collection - reserv bank

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25% ரிசர்வ் வங்கி குறைத்தது. இதுவரை 6 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இனி 5.75% ஆக  குறையும் என கூறப்படுகிறது. மேலும் வங்கிகளின் டெப்பாசிட்டுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டுள்ளது. 

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீட்டு கடன்,வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை அணைத்து தரப்பு மக்களும் வரவேற்கின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மற்றோர் செய்திக் குறிப்பில், RTGS மற்றும் NEFT ஆகிய ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு வங்கிகள் வசூலிக்கும் குறைந்தபட்ச கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும் வண்ணம், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

reservbank

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஒருவாரத்திற்குள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். பொதுமக்களிடையே ஏடிஎம் பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. 

இந்த சூழலில் ஏடிஎம் பயன்பாட்டிற்கான கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரிகள், பங்குதாரர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு கட்டமைக்கப்பட்டு தீர்வு காணப்படும். இந்தக் குழு முதல் கூட்டம் நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் தங்கள் கோரிக்கைகளை சமர்பிப்பர் என்று தெரிவித்துள்ளது.