மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான பயணத்தின் போது... விமானத்தின் அவசர கதவை திறக்கும் என்ற பயணி கைது...!!
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் மதுபோதையில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் 40 வயதான பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார். அந்த நபர் மது போதையில் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் நேற்று காலை 7:56 மணியளவில் நடந்துள்ளது. இதுதொடர்பாக இண்டிகோ நிறுவனம் கூறுகையில், டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் அவசர கதவை திறக்க முயன்றார்.
இதை பார்த்த விமானத்தில் இருந்த பணியாளர்கள் கேப்டனிடம் கூறினர். இதைத் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்ட பயணி எச்சரிக்கப்பட்டார். இந்நிலையில் விமானம் பெங்களூரு வந்ததும், அந்த பயணி சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.