மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹோட்டலுக்கு குட்பை.. எல்லாமே ஹோம் மேட் தான்.. ஜி.எஸ்.டி-யால் மக்கள் பரிதவிப்பு.. உயருகிறது இட்லி, தோசை, பொங்கல் விலை..!
அரிசியின் மீதான ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் மக்கள் கவலையடைந்துள்ள நிலையில், உணவகத்தில் அரிசி சார்ந்த பொருட்களின் விலை உயருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தினமும் உண்ணக்கூடிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்துவதில் மும்மரம் காண்பித்து வருகிறது. தற்போதுவரை வரியே இல்லாமல் இருந்த அரிசி, தயிர் போன்ற பொருட்களுக்கு கூட ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். ஜி.எஸ்.டி கூட்டத்தில் அரிசியும் ஜி.ஏ.டி-க்குள் கொண்டு வரப்பட்டுள்ள காரணத்தால் அரிசி ஆளை மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
அரிசி மீது வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக உணவகத்தில் சாப்பிடக்கூடிய உணவுகளின் விலையும் உயர வாய்ப்புள்ளது. அதன்படி, அரிசி சார்ந்த உணவு பொருட்களான இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம் போன்ற பொருட்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைப்போல, டீ, காபி. வடை, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகளுக்கும் 5 % வரி விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் விலை உயர்வு தொடர்பான தகவலை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதி செய்துள்ளனர். எது எப்படியானாலும் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான் என்பதைப்போல, அன்றாட கூலியாக பணியாற்றி உணவு வாங்கி சாப்பிடும் பலரும் இதனால் விரக்தியடைய தொடங்கியுள்ளனர். மேலும், மக்களில் பலரும் இனி எதற்கு ஹோட்டல் சென்று சாப்பிட வேண்டும்? வீட்டிலேயே செய்து சாப்பிட்டு இருந்துவிடலாம் என்ற மனநிலைக்கும் வந்துவிட்டனர்.